வேலூர்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வேலூர் கோட்டை, முக்கிய சுற்றுலாத் தளம் ஆகவும் விளங்குகிறது் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். வேலூர் கோட்டை பூங்கா அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஓருவர் மது போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் பாலாஜி மற்றும் தமிழ் ஆகியோர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்த முபாரக் (34) என்ற வாலிபரை, அங்கிருந்து போகக்கூறிய போது அவர்கள் காவலர்கள் மீது அங்கிருந்த பானிபூரி கடையில் கண்ணாடி துண்டுகளை வைத்து கிழித்ததில் காவலர்கள் காயம் அடைந்தனர்.
இதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்குள் அங்கு வந்த முபாரக்கை வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து முபாரக்கை அண்ணா சாலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது முபாரக் தப்பி ஓடினார். உடனே முபாரக்கை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்.
அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் விசாரணையில் முபாரக் போதையில் இருந்ததும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி பின்பு மத்திய சிறையில் அடைத்தனர்
இதையும் படிங்க : 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: கடும் நடவடுக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!