ETV Bharat / state

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபக மறதி : துரைமுருகன்! - புதிய மாவட்ட தொடக்க விழா

வேலூர்: மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் மக்களுக்கு பயன் இல்லை என்று நான் கூறினேனா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஞாபக மறதியில் பேசுகிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

dmk-treasurer-durai-murugan-replies-to-cm-criticise
dmk-treasurer-durai-murugan-replies-to-cm-criticise
author img

By

Published : Nov 30, 2019, 8:34 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.சி.கே நகர் பகுதியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை மற்றும் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிவற்றை திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காட்பாடியில் வெடிமருந்து தொழில் நிறுவனம் மீண்டும் யார் மூலமோ இயங்கவிருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம், அங்கு ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கவில்லை. இதுதொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அலுவலர்களையும், அமைச்சரையும் சந்தித்து பேசுவேன் என்றார்.

தொடர்ந்து, ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி , மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என துரைமுருகன் கூறுகிறார். என்று பேசிய கருத்துக்கு, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என நான் சொல்லவே இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் ஞாபக மறதி. திருப்பத்தூரைக் கூட திருப்பூர் எனக் கூறினார். வேறு யாரோ சொன்னதை நான் சொன்னதாக கூறியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடக்கட்டும் பார்க்கலாம் என துரைமுருகன் பதிலளித்தார்.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

முன்னதாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திமுக செய்தது சரி, அதிமுக செய்தது தவறா? என முதலமைச்சர் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துரைமுருகனுக்கு சால்வை போர்த்திய ஓபிஆர்; அரை மணி நேர ஆலோசனையின் பின்னணி?

Intro:வேலூர் மாவட்டம்

மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் மக்களுக்கு பயன் இல்லை என்று நான் கூறினேனா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஞாபக மறதியில் பேசுகிறார் - வேலூரில் துரைமுருகன் பேட்டி
Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.சி.கே நகர் பகுதியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்குடை மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்தகரிப்பு நீர் நிலையம் ஆகிவற்றை காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பிறகு துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளிக்கையில், காட்பாடி வெடிமருந்து தொழில் நிறுவனம் மீண்டும் யார் மூலமோ இயங்க இருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம், அங்கு ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கவில்லை. இதுதொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சந்தித்து பேசுவேன் என்றார். தொடர்ந்து அவரிடம், ராணிப்பேட்டை புதிய மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என துரைமுருகன் கூறுகிறார். ஆனால் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் நீங்கள் செய்தது சரி, நாங்கள் செய்தது தவறா? என பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் அதுபோன்று சொல்லவே இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொஞ்சம் ஞாபக மறதி. திருப்பத்தூரை கூட திருப்பூர் என்று கூறினார். எனவே வேறு யாரோ சொன்னதை நான் சொன்னதாக கூறியிருக்கிறார் என்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடக்கும் என முதல்வர் கூறியுள்ளாரே என கேட்டதற்கு, உள்ளாட்சித் தேர்தல் நடக்கட்டும் பார்ப்போம் என்று கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.