ETV Bharat / state

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்: தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க திமுக எப்போதும் தயார் - அமைச்சர் துரைமுருகன்! - Next Corruption List

Minister Durai murugan: நாளையே தேர்தல் வந்தாலும் திமுக அதனைச் சந்திக்கத் தயாராக உள்ளதாக காட்பாடியில் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயார்
அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 10:33 PM IST

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்

வேலூர்: தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க திமுக எப்போதும் தயார் என கூறிய அமைச்சர் துரைமுருகன், அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும் என பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி காலை முதல் நடந்து வருகிறது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த திரளான திமுகவினர் அமைச்சர் துரைமுருகனைச் சந்தித்து வரிசையாக வாழ்த்து பெற்றனர்.

சந்திக்க வந்த அனைவருக்கும் வேட்டி மற்றும் துண்டுகளை அமைச்சர் துரைமுருகன் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் வன்னியராஜா, முகமது சகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்த போதும், இப்போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளவர். அவரிடம் இருந்து எந்த காலத்திலும் தமிழகத்திற்குச் சாதமான வார்த்தைகள் வராது.

இதையும் படிங்க: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பொன்மனை விஏஓ!

அவர் டிரிப்யூனல் அமைப்பதை எதிர்த்தார், டிரிப்யூனல் கஜெட்டில் போடுவதை எதிர்த்தார், அவர் காலம் முழுக்க தமிழகத்திற்கு எதிராகத் தான் இருப்பார். காவிரி பிரச்சனையை மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என தேவகவுடா கூறுவது அப்போது தான் அவர் பிள்ளைகள் அரசியல் நடத்த முடியும் என்ற எண்ணத்தால் தான். அவர் ஆதாயத்திற்காகப் பேசுகிறாரோ, வெறுப்பாகப் பேசுகிறாரோ, ஆனால் எப்போதும் தமிழகத்திற்கு எதிர்ப்பாகத் தான் பேசுவார்.

தொடர்ந்து அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது குறித்துப் பேசுகையில், “அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும், நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம், நாளைக்கே தேர்தல் வந்தாலும் திமுக அதனைச் சந்திப்போம். இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்குக் கூட்டணி பற்றிச் சொல்ல முடியாது, இப்போது இருப்பவர்கள் எங்களுடன் உறுதியாக இருப்பார்கள் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்துக் கேட்டதற்கு அவர் எதிர்க்கட்சி, அவர் அப்படி தான் கூறுவார் என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட கைக்குழந்தை.. கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.