வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனைக் கண்டித்து திமுக சார்பில் காட்பாடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் ஏரிகளை முறையாகத் தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலை: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்!