ETV Bharat / state

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்

வேலூர்: 13 சட்டபேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வெளியிட்டார்.

voters list of Vellore district
voters list of Vellore district
author img

By

Published : Dec 23, 2019, 4:55 PM IST

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் திருத்தம் செய்ய வாக்காளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வெளியிட்டார்.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கே வி குப்பம்(தனி), குடியாத்தம்(தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 15 லட்சத்து 32 ஆயிரத்து 885 பேர் ஆண்கள், 15 லட்சத்து 94 ஆயிரத்து 921 பேர் பெண்கள், 180 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். இதில் குடியாத்தம் சட்டபேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரத்து 475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், "இந்த பட்டியல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகள், சார் ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 35 இடங்களில் 1,700 மையங்களில் பார்வைக்கு வைக்கப்படும். இந்த பட்டியலில் தேவையான திருத்தங்களை இன்று முதல் வரும் ஜனவரி 22ம் தேதி வரை மேற்கொள்ளலாம். வரும் 2020 பிப்ரவரி 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.

இதையும் படிங்க: செம்பனார்கோவில் பகுதியில் எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பு!

Intro:வேலூர் மாவட்டம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 31.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருத்தம் மேற்கொள்ள ஒரு மாதம் கால அவகாசம்Body:இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் ஆகியவற்றிற்கு வாக்காளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும் அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வெளியிட்டார் அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம்(தனி) சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு வேலூர் அணைக்கட்டு கே வி குப்பம்(தனி) குடியாத்தம்(தனி) வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 13 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இதில் மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 885 பேர் பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 94 ஆயிரத்து 921 மூன்றாம் பாலினத்தவர் 180 பேர் என மொத்தம் 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 475 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் மேலும் இந்த பட்டியல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் சார் ஆட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 35 இடங்களில் 1,700 மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் மேலும் இந்த பட்டியலில் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் ஆகிய பணிகள் இன்றிலிருந்தே தொடங்கப்படுகிறது இன்று முதல் வரும் ஜனவரி 22ம் தேதி வரை மேற்கண்ட ஆயிரத்து 700 மையங்களில் இதற்கான படிவங்கள் வழங்கப்படும் அதில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்தல் சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம் இந்த படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் 2020 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.