வேலூர்: அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று (ஜூன் 17) காலை ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது கரோனா சிகிச்சைகாக ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம், ஆக்சிஜன் செறிவூட்டும் மையம், கரோனா முன் பரிசோதனை மையம் ஆகியவைற்றை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுசெய்தார்.
இதனைத் தொடர்ந்து கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையின் முதல்வர் செல்வியிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, துணை இயக்கநர் சுகாதாரப்பணிகள் மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்