ETV Bharat / state

மதுபோதையில் பிச்சைக்காரர்களுக்கு இடையே தகராறு - ஒருவர் கொலை - பிச்சைக்காரர்களுக்கு இடையே தகராறு

காட்பாடி அருகே மதுபோதையில் பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

v
v
author img

By

Published : Nov 6, 2021, 8:01 PM IST

வேலூர்: காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தயாநந்தகிரி. இவர் அப்பகுதிகளில் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த பாபுராஜ், அவருடைய நண்பர் தனிப்பல் என்பவருக்கும் மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதை அப்பகுதியில் முககவசம் விற்பனை செய்து கொண்டிருந்து விக்ரம் சிங் என்பவர் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தார்.

அப்போது பாபுராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தயாநந்தகிரியின் மார்பு பகுதியிலும், நெற்றியிலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தயாநந்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விக்ரம் சிங் காட்பாடி காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த தயாநந்தகிரி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுராஜை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடிய தனிப்பல் என்பவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிச்சைக்காரரான கல்லூரி பேராசிரியர்... மதுரையில் நிகழ்ந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.