ETV Bharat / state

டெங்கு ஒழிப்பு பணியை முறையாக செய்யாத 50 தற்கால பணியாளர்கள் நீக்கம் - டெங்கு தற்காலிக பணியாளர்கள் பணியிடை நீக்கம்

வேலூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் சரிவர செய்யாத 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

dengue
author img

By

Published : Nov 13, 2019, 2:15 PM IST

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு மிக தீவிரமாகக் காணப்படுகிறது கடந்த ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி முதல் டிசம்பர் வரை 350க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலேயே 700க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

அதன்படி நாள்தோறும் அனைத்து துறை அலுவலர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குழு அமைத்தார். பின்னர் டெங்கு கொசுக்களை அழிப்பதற்காக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மூலம் அந்தந்த பகுதிகளில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் ஐம்பது வீடுகளில்ஆய்வு செய்து டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அதை மருந்து மூலம் அழிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது முக்கிய வேலையாகும். இதில் சரிவர கவனம் செலுத்தாமல் வேலை பார்க்கும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக மாற்றிவிட்டு மாற்று ஊழியர்களை நியமித்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடாத 50 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷிடம் கேட்டபோது, "மாவட்ட ஆட்சியர் அதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் அதாவது மூன்று மாதத்திற்கு முன்பு களப்பணியாளர்கள் நியமிக்கும் போதே அவர்கள் சரிவர வேலை செய்யாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்று ஊழியர்களை வைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்த களப்பணியாளர்கள் முழுக்க முழுக்க தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஆவர். எனவே அவர்களது வேலையில் திருப்தி இல்லாவிட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை நியிமித்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு உண்டு அதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக நாள்தோறும் ஒன்றிரண்டு தற்காலிக பணியாளர்களை நீக்கப்பட்டு மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது வரை 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிளில் சரிவர ஈடுபடாத 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் -அதிகாரிகள் தகவல்Body:வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு மிகத்தீவிரமாக காணப்படுகிறது கடந்த ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி முதல் டிசம்பர் வரை 350க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலேயே 700க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தீவிரம் காட்டத் தொடங்கினார் அதன்படி நாள்தோறும் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குழு அமைத்தார் பின்னர் டெங்கு கொசுக்களை அளிப்பதற்காக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மூலம் அந்த அதிகாரி உட்பட்ட பகுதிகளில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் முழுக்க முழுக்க தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் ஐம்பது வரிகளில் அது ஆய்வு செய்து டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அதை மருந்து மூலம் உழைக்க வேண்டும் என்பதுதான் இவர்களது முக்கிய வேலையாகும் இதில் சரிவர கவனம் செலுத்தாமல் வேலை பார்க்கும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக மாற்றி விட்டு மாற்று ஊழியர்களை நியமித்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார் இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடாத 50 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷிடம் கேட்டபோது, "மாவட்ட ஆட்சியர் அதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் அதாவது மூன்று மாதத்திற்கு முன்பு களப்பணியாளர்கள் நியமிக்கும் போதே அவர்கள் சரிவர வேலை செய்யாவிட்டால் அவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட ஏரியாவில் மாற்று ஊழியர்களை வைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் இந்த களப்பணியாளர்கள் முழுக்க முழுக்க தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஆவர் எனவே அவர்களது வேலையில் திருப்தி இல்லாவிட்டால் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு மாற்று பணியாளர்களை நியிமித்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அதிகாரிகளுக்கு உண்டு அதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக நாள்தோறும் ஒன்றிரண்டு தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மாற்று ஊழியர்களை நியமிக்கப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது வரை 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

dengue
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.