இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியிருக்கிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அச்சமயத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்கள் சரிவர செயல்படாததன் காரணமாகவே பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியது.
இதன் விளைவாக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கடந்தாண்டைவிட இந்தாண்டு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348ஆக இருந்தது. ஆனால் இந்தாண்டு 792ஆக அதிகரித்துவிட்டது. இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி அதிகரித்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - 184 பேர் அனுமதி