ETV Bharat / state

குடிநீருக்காக கடவுளிடம் முறையிட வந்த புள்ளிமான்..!

வேலூர்: குடியாத்தம் அருகே தண்ணீரை தேடி கோயிலுக்குள் புகுந்த புள்ளிமான் குட்டியை மடக்கி பிடித்து வனத்துறையினர் காட்டில் விட்டனர்.

author img

By

Published : May 4, 2019, 11:42 PM IST

தண்ணீரை தேடி கோயிலுக்குள் புகுந்த மான் குட்டி

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யாததால், தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வனப்பகுதியில் வனவிலங்குகளும் குடிக்க நீருன்றி தவித்து வருகின்றன.

இந்நிலையில் குடியாத்தம் அடுத்த முதலியார் ஏரி காப்புக்காட்டில், இரண்டரை வயது ஆண் புள்ளிமான் ஒன்று, தண்ணீரை தேடி இன்று ஊருக்குள் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் புள்ளிமானை துரத்த ஆரம்பித்தனர். மக்களை கண்ட அச்சத்தில், அங்கிருந்த காளியம்மன் கோயிலுக்குள் புள்ளி மான் புகுந்துவிட்டது.

இதையடுத்து பொதுமக்கள் கோயிலின் கதவை இழுத்து மூடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், மானைப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறை அலுவலர்களுக்கு போக்குகாட்டி, கோயில் முழுவதும் மான் சுற்றி வந்தது. ஒருக்கட்டத்தில் புள்ளிமானை அலுவலர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி காப்புக் காட்டில் புள்ளிமானை விட்டனர்.

தண்ணீரை தேடி கோயிலுக்குள் புகுந்த மான் குட்டி...

Intro:குடியாத்தம் அருகே தண்ணீர் தேடி கோயிலுக்குள் தஞ்சம் புகுந்த man வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள்

Body:வேலூர் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது கடந்த வடகிழக்கு பருவமழையின்போது போதிய மழை பெய்யாததால் இங்கு தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த தண்ணீர் பிரச்சினையில் வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன அதாவது வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதியில் இருந்து விலங்குகள் தண்ணீரின்றி ஊருக்குள் சுற்றி வருகின்றன இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதாவது குடியாத்தம் அடுத்த முதலியார் ஏரி காப்புக்காட்டில் இருந்து சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று இன்று வெயிலின் தாக்கத்தால் ஊருக்குள் சுற்றித்திரிந்தது இதை கண்ட பொதுமக்கள் அந்த மானை துரத்த ஆரம்பித்தனர் இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் அருகில் உள்ள காளியம்மன்பட்டி ஊருக்குள் சென்றது பின்னர் பொதுமக்களை பகண்டு அச்சத்தில் அங்கிருந்த காளியம்மன் கோவிலுக்குள் வந்து மான் தஞ்சம் புகுந்தது இதையடுத்து பொதுமக்கள் கோவிலின் கேட்டை இழுத்து மூடினர். கோயிலைச் சுற்றிலும் காம்பவுன்டு சுவர் இருந்ததால் மான் வெளியில் தப்பி செல்ல முடியவில்லை இதனால் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது இதற்கிடையில் தகவல் அறிந்து வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்றனர் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ஊழியர்கள் அந்த மானை பிடித்தனர் தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்ட அந்த புள்ளி மான் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி காப்பு காட்டில் விடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.