திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் கைலாசகிரி மலையடிவாரத்தில் இன்று காலை 4 வயதுள்ள மான் ஒன்று உடலில் பல காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளது.
இதனைக் கண்ட கிராம மக்கள் உயிருக்கு போராடிய மானை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் மான் இறந்துவிட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மானை உடற்கூறாய்வுக்காக வைத்தணாங்குப்பம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
சில நாட்களாக ஆம்பூர் மலைப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்துவருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இம்மானையும் சிறுத்தை தாக்கி இருக்ககூடும் என கிராம மக்கள் சந்தேகித்துள்ளனர்.
மேலும் இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை அடிவார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!