உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பத்தலபள்ளி, சைனகுண்டா, பொன்னை, கிருஷ்டியான்பேட்டை, சேர்காடு, பரதராமி ஆகிய 6 சோதனைச்சாவடிகளில் பொன்னை, சைனகுண்டா சோதனைச் சாவடிகள், மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.
அதையடுத்து இன்று, பொன்னை, சைனகுண்டா சோதனைச்சாவடி சாலைகளை முழுவதுமாக மூடும் வகையில் 3 அடி உயரச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
அதையடுத்து சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களின் வருகை பாதிக்காத வகையில், ஆந்திராவிலிருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஷ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: சமூக இடைவெளியை பின்பற்ற கிராமப்புற சாலைகள் மூடல்