ETV Bharat / state

எச்ஐவி நோய் குணபடுத்தும் மருந்து சித்த மருவத்தில் உள்ளது- சித்த மருத்துவர் தில்லைவாணன்

author img

By

Published : Jan 2, 2021, 5:35 PM IST

வேலூர்: தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சித்த மருத்துவ சிறப்பு முகாம், மூலிகை கண்காட்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான மூலிகைகள் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன.

சித்த மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி

நாடு முழுவதும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 18ஆம் தேதி, தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று(ஜன. 02) வேலூர் மாவட்ட சித்த மருத்துவத் துறை சார்பில் வேலூர் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து பொது மக்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகைகள் கண்காட்சி வேலூர் தந்தை பெரியார் நூலகத்தில் நடத்தப்பட்டது.

இதில், சித்திரமூலம், சங்கு புஷ்பம், அதிமதுரம் உள்ளிட்ட 60 வகையான மூலிகைகளும், 150 வகையான மூல மூலிகை பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சிக்கு வருகை தந்த பொது மக்களுக்கு இலவசமாக மூலிகை, முகக் கவசம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "சித்த மருத்துவம் சார்ந்த மூலிகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் தற்போது சித்த மருத்துவத்தின் மீது ஆர்வத்துடன் உள்ளனர். சித்த மருத்துவத்தை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்லும்போது இன்னும் சிறப்பாக இளைஞர்கள் மத்தியில் சித்த மருத்துவம் உயிர்தெழும். உதாரணமாக சீரகம் எந்தெந்த வியாதிகளை குணப்படுத்துகிறது. இவற்றில் உள்ள வேதிப் பொருள்கள் என்ன என்பது குறித்து விளக்கும்போது இளைஞர்களிடம் எளிதில் எடுத்து செல்ல முடியும்.

எச்ஐவி நோய் குணபடுத்தும் மருந்து சித்த மருவத்தில் உள்ளது- சித்த மருத்துவர் தில்லைவாணன்

சித்த மருத்துவத்தில் 4 ஆயிரத்து 448 நோய்களுக்கான மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்கள் எழுதி வைத்துவிட்டனர். குறிப்பாக உலக நாடுகளை ஆட்டிப் படைக்கும் எச்ஐவி நோயை குனப்படுத்த ரேன்(RAN) தெரபி எனும் மருத்துவ முறை உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.