வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி தோனிகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் வனத்துறையை ஒட்டியுள்ள பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) பசு மற்றும் பசுங்கன்றுகளை மாட்டு கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து மறுநாள் காலை கொட்டகையில் இருந்த பசுங்கன்று காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கணபதி, வனகாப்பு காட்டில் தேடி பார்த்ததில் சிறுத்தை தாக்கி பசுங்கன்று பலியானதை அறிந்துள்ளார். இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு தவமணி என்பவருடைய ஆடு, சிறுத்தை தாக்கி பலியானது. இவ்வாறு தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால், விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் வனத்துறை அலுவலர்கள், காப்புகாடு ஒட்டியுள்ள வனப்பகுதியில் விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டை வைத்து சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!!