வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அம்மாவட்டத்தின் நிலவரம் குறித்தும் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள முதலமைச்சர், நலதிட்டங்களை வழங்கி புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் நிகழ்வில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நலத் திட்டங்களை பெறுவோருக்கு வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் இன்று (ஆக. 17) கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. மாலை நான்கு மணி வரை இந்த முகாமில் பலருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.