நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்த அசோகன். இவரது வீட்டின் முன் உள்ள நிலத்தின் உரிமையாளர் தகரக்கொட்டாயை ஒன்றை அமைத்துள்ளார். இதற்கு அருகாமையிலே மின்கம்பம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனது வீட்டிற்கு சென்று வர வழியில்லாமல் என குற்றம்சாட்டும் அசோகன், தனது வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மற்றும் தகரக்கொட்டாயை ஆகியவற்றை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கடும் குளிரினால் ஒருவர் உயிரிழப்பு! குன்னூர் அருகே ஏற்பட்ட சோகம்..!
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விஷ மருந்து பாட்டிலுடன் அசோகன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அசோகன் கொண்டு வந்த விஷ பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தநிகழ்வை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொது மக்களை உரிய முறையில் சோதனை மேற்கொண்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென வரும் காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்