ETV Bharat / state

தொடர் மழையால் சேதமடைந்த பருத்தி விளைச்சல்: விவசாயிகள் வேதனை! - வேலுர் திருப்பத்தூரில் தொடர் மழையால் சேதமடைந்த பருத்தி விளைச்சல்

திருப்பத்தூர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, விளைச்சலுக்குத் தயார் நிலையில் இருந்த பருத்தி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்
வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்
author img

By

Published : Dec 4, 2019, 11:02 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து, இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர் நிரம்பி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும் குளிர்ச்சியான சூழல் மாவட்டம் முழுவதும் நிலவிவருகிறது.

வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

நீர்மட்டம் உயர்வின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தாலும், தொடர் மழையை கண்டு விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்; மழை பெய்வது நல்லதுதான் ஆனால், தொடர் மழையால் நாங்கள் கடன் வாங்கி விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள பருத்தி உதிர்ந்து சேதமடைந்தது.

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது, சோள கதிர்கள், கருகி கருப்பு மை போல் உள்ளது. மேலும், தொடர் மழையால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வருகின்றன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சொந்த செலவில் சேதமடைந்த சாலையைச் சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்... பொதுமக்கள் பாராட்டு!

Intro:திருப்பத்தூர் முழுவதும் பரவலான தொடர் மழையால் பருத்தி விளைச்சல் பாதிப்பு! அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் சோளப்பயிர்கள் சேதம் ஆடு மாடுகளுக்கு உணவின்றி தவிப்பு...Body:

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக நீர் நிலைகள் நீர் நிரம்பி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது நீர்மட்டம் உயர்வு காரணமாக விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் பணிக்கு செல்பவர்கள் என பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் விவசாயிகள் கூறுகையில்மழை பெய்வது நல்லதுதான் ஆனால் தொடர் மழையால் நாங்கள் கடன் வாங்கி விவசாய நிலத்தில் பயிரிட்டு உள்ள பருத்தி மழையினால் பூ. பிஞ்சு. உதிர்ந்து சேதமானது அதுமட்டுமின்றி அறுவடைக்குக் தயாராக இருந்த நெற்கதிர்கள் சாந்து சேதமானது தொடர் மழையினால் சோள கதிர்கள். கருகி கருப்பு மை போல் சேதம் ஆகியது.அதுமட்டுமின்றி தொடர் மழையால் ஆடு மாடுகள் மேய்ச்சல் இல்லாமல் உள்ளது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்....Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.