கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், தொற்று எண்ணிக்கையை குறைக்க இந்திய அரசு, நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்திற்கென்று 13 ஆயிரம் கரோனா தடுப்பூசி வந்தடைந்தது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால், பெரும்பாலானவற்றை மாநகராட்சிக்கும், ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி இரண்டு நாட்களுக்குள் தீர்ந்து விடும் என்பதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பெரும் ஏமாற்றத்துக்குள்ளான தொழிலதிபர் கதை - சிக்குவார்களா அரசு அலுவலர்கள்!