வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் ஸ்வர்ணா தலைமையில் இன்று (ஜூன் 1) கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மக்கள் அதிகம் ஊரடங்கு காலத்தில் நடமாடுவதைத் தடுப்பது, கிராமப்புறங்களில் அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு முன்னரே சிகிச்சையளித்தல், மக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.