வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட மருத்துவ துறையினர், வருவாய் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாளை (ஆகஸ்ட் 29) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், முதலமைச்சரிடம் வேலூர் மாவட்டத்தில் இருந்து வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.