ETV Bharat / state

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ போராட்டம் - municipality

வேலூர்: பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகள், சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.

protest in dmk mla
author img

By

Published : Aug 14, 2019, 6:45 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளை உடைத்து குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் இதுவரை அந்த குழிகள் மற்றும் சாலைகளை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனேயே கடந்து செல்லவேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் எம்எல்ஏ

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் சாலைகளை வருட கணக்கில் சரிவர சீரமைக்காத காரணத்தினால் நகராட்சியை கண்டித்து திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சாலையில் அமர்ந்து போராட்டம்.

Body: வேலூர் மாவட்டம்

திருப்பத்தூர் - திருவண்ணாமலை செல்லும் சாலை சின்னக்கடை தெரு பகுதியில் திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் கட்சியினர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்,

தகவலறிந்து வட்டாச்சியர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்,

அப்போது சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில்,

திருப்பத்தூர் நகர் பகுதியில் 89 கிலோமீட்டர் நீளம், உள்ள வார்டுகளில் மிகவும் மோசமான பழுதடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் சாலைகள் உள்ளது.

இந்த பாதாள சாக்கடை திட்டம், கடந்த 4 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, நகராட்சியில் பல பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நிறைவு பெறாமல் காட்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது.

இதைப்பற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன் பல போராட்டங்களில் ஈடுப்பட்டு பல மனுக்களை நகராட்சிக்கு அளித்தோம், ஆனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் தட்டிக்கழித்து வருகின்றனர்.

Conclusion: மேலும் குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அவ்வப்போது நிலைத்தடுமாறி விழுந்து சில சமயங்களில் உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.

இதனால் திருப்பத்தூர் - திருவண்ணாமலை 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.