ETV Bharat / state

எருது விடும் விழா: காளை உரிமையாளர்கள், விழாக் குழுவினருடன் ஆட்சியர் ஆலோசனை - vellore district news

வேலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி நடைபெறும் எருது விடும் விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எருதுவிடும் விழாக் குழுவினர், காளை உரிமையாளர்களுடன் நேற்று (டிசம்பர் 30) ஆலோசனை நடத்தினர்.

bull festival vellore
எருது விடும் விழா: காளை உரிமையாளர்கள், விழா குழுவினருடன் ஆட்சியர் ஆலோசனை
author img

By

Published : Dec 31, 2020, 6:32 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி நடைபெறும் எருது விடும் விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எருதுவிடும் விழாக் குழுவினர், காளை உரிமையாளர்களுடன் நேற்று (டிசம்பர் 30) ஆலோசனை நடத்தினர். இதில், அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கட்டாயம் விழாக் குழுவினர் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 82 கிராமங்களுக்கு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், எருதுவிடும் விழாவை பிப்ரவரி மாத இறுதிக்குள்ளேயே நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டி

எருது விடும் விழா நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள், பங்கேற்பாளர்கள், மாட்டுடன் வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றைப் பெற்றிருக்க வேண்டும். பரிசோதனையை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம்.

பரிசோதனையின் அடிப்படையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அவை, பிப்ரவரி 28ஆம் தேதிவரை செல்லுபடியாகும். 150 வீரர்களுக்கு மேல் விழாவில் கலந்துகொள்ளக் கூடாது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாகச் செய்து கொடுக்கப்படும். பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

எருது விடும் விழாவிற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் ஜனவரி 4ஆம் தேதி மாலை 5மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். இதுவரை 60 குழுவினர் விண்ணப்பித்துள்ளனர். வேலூரில் விதியை மீறி எருது விடும் விழா நடத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் எருமை மாட்டை அனுமதிக்கக் கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.