ETV Bharat / state

ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியர் தகவல் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

வேலூர்: ஜெருசேலம் பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Oct 17, 2019, 10:33 AM IST

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019 - 20ஆம் ஆண்டிற்கான ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவுகளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் இந்த பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் பிற புனித தலங்களை உள்ளடக்கியது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் பேட்டி

புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019- 20 என்று குறிப்பிட்டு இயக்குனர் சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஸ்ரீகாந்த் மஹாதேவ் யாத்திரைக்கான தேதி அறிவிப்பு

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஜெருசேலம் பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்Body:வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் ஜெருசேலம் பயணம் செல்ல விரும்புபவர்கள் அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019 - 20 ஆம் ஆண்டிற்கான ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவுகளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் கன்னியாஸ்திரிகள் அருட்சகோதரிகள் இந்த பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது இந்த புனித பயணம் இஸ்ரேல் எகிப்து மற்றும் பிற புனித தலங்களை உள்ளடக்கியது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019- 20 என்று குறிப்பிட்டு இயக்குனர் சிறுபான்மையினர் நலத்துறை கலசமஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம் சேப்பாக்கம் சென்னை-600005, என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.