ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு ஹரி கிருஷ்ணன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தான். இந்நிலையில் நேற்றிரவு ஹரி கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகிலுள்ள நீர்தேக்கத் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.
நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லையே என சதீஷ் வீட்டின் அருகே தேடியபோது, நீர்தேக்கத் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் அவர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது எனத் தெரிவித்தனர்.
நீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் செல்லப்பிள்ளை என அக்கம் பக்கத்தினர் கண்ணீர் மல்க உருக்கத்தோடு கூறினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வீடுகளை இழந்து நடுக்காட்டில் தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்...!