வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் கணக்காளராக பணியாற்றி வருபவர் சுபலக்ஷ்மி. இவர், காட்பாடி காந்திநகர் காலேஜ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சுபலக்ஷ்மி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அதேபோன்று காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் குழந்தைகள் வன்கொடுமை விழிபுணர்வு அரசு விழாவிற்க்கு நடந்து சென்று கொண்டிருந்த வேலூர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த செல்வராணி (49) என்ற அரசு பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5சவரன் தங்க சங்கிலியை அதே பாணியில் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றுள்ளனர்.
ஒரே நாளில் 10நிமிடங்களில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் 8 1/2 சவரன் தங்க நகை பறிப்பு சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது இரண்டு சம்பவம் குறித்தும், சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்தும் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது!