திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனையடுத்து மூன்று மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து சுற்றி திரிந்துள்ளது.
இதனைக் கண்ட அந்தப் பகுதி நாய்கள் அதிக நேரம் குரைத்தபடி இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வந்து பார்த்த போது, மூன்று மான்கள் ஊருக்குள் அங்கும் இங்கும் சுற்றிதிரிந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் மான்களை விரட்டியுள்ளனர். அப்போது இரண்டு மான்கள் மட்டும் காட்டுப்பகுதிக்குச் சென்ற நிலையில், 4 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் மான் மட்டும் அங்கேயே இருந்துள்ளது.
அதனைப் பிடித்து அங்குள்ள கோயிலில் கட்டி வைத்த போது, அந்த மானை அவ்வழியாகச் சென்ற மக்கள் கண்டு ரசித்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வனத்துறையினர் வந்து மானை மீட்டு விண்ணமங்கலம் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.
இதையும் படிங்க :‘பாஜக ஆட்சியில் இருக்கக் கூடாது... இதுதான் காங்கிரஸின் எண்ணம்’ - பாஜக சாடல்