வேலூர்: காற்று மாசு காரணமாக தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
நேற்று (நவ.4) நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1,614 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 517 பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்த 57 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நயன்தாரா