வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், விஜய், விக்னேஷ், சக்திவேல். இவர்கள் நேற்றிரவு மதுஅருந்தி இருசக்கர வாகனத்தில் சென்று லத்தேரி பகுதியில் தகராறு செய்துள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மூவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.
அதில், கோபி என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடியவர்களைப் பொதுமக்கள் விரட்டியதில் சக்திவேலைப் பிடித்து அங்குள்ள அரச மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் மரத்தில் கட்டப்பட்டிருந்த சக்திவேலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சக்திவேலைக் கட்டிவைத்து தாக்கியதாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: