ETV Bharat / state

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு பாஜக கோரிக்கை

இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு பாஜக கோரிக்கை
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு பாஜக கோரிக்கை
author img

By

Published : Jul 10, 2022, 9:32 PM IST

வேலூர்: அரப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன்,எல்.முருகன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கிராமத்தில் பிறந்து அரசு பணியில் இருந்து நமது தமிழ்நாடு விளைநிலங்கள் மலடாகப்படுவதை கண்டு வேதனை பட்டு இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த மரியாதைக்குரிய காலம் சென்ற கே.நம்வாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு பாஜக கோரிக்கை

மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு அதற்கு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கதக்கது; மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறுவது ஏமாற்று வேலை என்றார்.

தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பாக தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்துள்ளனர். இது தமிழுக்கு பெருத்த அவமானம். மேலும் தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் சரியானவையாக இல்லை என சாடினார்

தமிழ்நாட்டில் போதை பொருட்களான கஞ்சா,அபின் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது; இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

இதையும் படிங்க:பண்ணைபுரம் to பாராளுமன்றம் வரை... இசைராஜாவின் பயணம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.