வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த வடுகந்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி (46). இவர் இன்று (டிச.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
உடனே அவரை அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தண்டபாணி கூறுகையில், "என் மீது காவல் துறையினர் போலியாக வழக்குப்பதிவு செய்ததால் தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.
பின்னர் தண்டபாணியை சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசு - விவசாய தம்பதி தற்கொலை முயற்சி!