ETV Bharat / state

தூக்கத்துக்கு இடையூறு: வேலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

வேலூர்: தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தற்கொலைக்கு  முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சிறைச்சாலை
வேலூர் சிறைச்சாலை
author img

By

Published : Jul 18, 2020, 12:34 AM IST

சிவகங்கை மாவட்டம், மானமதுரையைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற பர்மா பாண்டி (32). இவர், கடந்த 2019ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதி பாண்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த மற்றொரு கைதி நேற்று இரவு தனக்கு மனநிலை சரியில்லை என, தனது வருத்தத்தை அங்கு வந்த சிறை காவலரோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதனால் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியனுக்குத் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறை காவலரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆந்திரம் அடைந்த பாண்டியன் அருகில் இருந்த முகம் சேவிங் செய்யும் சேவிங் மிஷினை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை தடுத்த சிறை காவலர்கள் கைதி பாண்டியனை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளானர். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிறைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.