ETV Bharat / state

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு பாராட்டு! - 4 year old boy

14 சாதனைகளை நிகழ்த்தி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுவனுக்கு அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு பாராட்டு விழா!

author img

By

Published : Aug 2, 2021, 8:45 PM IST

வேலூர்: குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி வினோத் - தனலட்சுமி. இவர்களின் 4 வயது மகன் சாணக்கியா. தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 14 சாதனைகளை நிகழ்த்தி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

மாநில தலைநகரங்கள், 36 மாவட்டங்களின் பெயர்கள், இந்திய வரைபடத்தில் மிகப்பெரிய இடங்களை கண்டறித்தல், தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள், மேலும் கண்களைக் கட்டிக்கொண்டு தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம், பக்தி பாடல்களை பியானோவில் வாசித்தல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இதற்காக அந்த சிறுவனுக்கு குடியாத்தம் அரிமா சங்கத்தில் இன்று (ஆக.2) பாராட்டு விழா நடைபெற்றது‌. அப்போது அந்த சிறுவன் தான் செய்த சாதனைகள் அனைத்தையும் பார்வையாளர் முன்னிலையில் செய்து காட்டி அசத்தினார்.

இதையும் படிங்க: ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.