வேலூர்: அ.தி.மு.க ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே. சி. வீரமணி. இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று கே. சி. வீரமணிக்கு தொடர்புடைய பல்வோறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
கே. சி. வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை
இதையடுத்து ஆவினின் தலைவர் பதவியை வகித்து வரும் அ.தி.மு.க- வின் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், கே. சி. வீரமணிக்கு தொடர்புடைய ஆவணங்களை, ஆவின் நிறுவனத்தில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சோதனை செய்தனர்.
பின்னர் சாய்நாதபுரத்தைச் சேர்ந்த வேலழகனுடைய நண்பர் சம்பத்குமார் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு