ETV Bharat / state

3 அம்ச கோரிக்கைகள்:  வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்! - velur district anganwadi staffs

வேலூர்: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மூன்றம்ச கோரிக்கைகள்
மூன்றம்ச கோரிக்கைகள்
author img

By

Published : Feb 24, 2021, 6:23 AM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நேற்று முன்தினம் (பிப். 22) நடைபெற்றது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்ததை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவைகளாவன:

  1. அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்,
  2. அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும்,
  3. பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட வேண்டும்

உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி 80-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தங்களது கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறி கறுப்புப் பட்டை அணிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.