வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுகவைச் சேர்ந்த ஏ.பி.நந்தகுமார், அதே தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர், நேற்று (மார்ச்.20) அணைக்கட்டு தொகுதிக்குள்பட்ட விரிஞ்சிபுரம், டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் வேனில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளரை வரவேற்க மேளம் அடித்து பொதுமக்கள் நடனமாடி வந்தனர். இதனைப் பார்த்த அவர், உடனடியாக வேனிலிருந்து இறங்கி, பொதுமக்களுடன் இணைந்து நடனமாடத் தொடங்கினார். இதைப் பார்த்த தொண்டர்கள், ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளின் தாய் நேசம்மா!