ETV Bharat / state

கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்ட முன்னாள் அமைச்சர்

வேலூர்: அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயர் சொல்லி அழுதுக் கொண்டே முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் ஓட்டுக் கேட்டார்.

அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
author img

By

Published : Mar 23, 2019, 6:44 PM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் கட்சி சார்பாக போட்டியிடும் பாலசுப்பிரமணியனுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் பேசுகையில், ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் நான் திரும்பவும் வென்று காட்டுவேன், எனது வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது. அமுமக ஆட்சிக்கு வந்தவுடன் பல நாள் கோரிக்கையான ஆம்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார்

வேட்பாளர் அறிமுக கூட்டம்
.

இதையடுத்து அவருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், மத்தியில் பாஜக ஆட்சியை ஒழிக்க அமமுக தமிழகத்தில் தனித்து போட்டியிடும். நமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதனால் இக்கூட்டத்தில் உள்ளவர்களும், தலைவர்கள் ஆகலாம் என கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் பெயர் சொல்லி நீங்கள் தான் இக்கூட்டதை உருவாக்கியவர்கள். அதனால் உங்களுக்கு அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும் நகைச்சுவையுடன் கண்ணீர் மல்க கூறி ஓட்டு கேட்டார்.

Intro:ஆம்பூரில் நடைப்பெற்ற அமமுக வேட்பாளர் அறிமுக ஆலோசனைக்கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயர் சொல்லி கண்ணீர் விட்டு ஓட்டு கேட்ட முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன்.

Body:வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமமுக கட்சியின் சார்பாக வேட்பாளர் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக அணியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அமமுக கட்சி சார்பாக போட்டியிடும் பாலசுப்பிரமணியம் பேசுகையில் ஆம்பூர் தொகுதியிலே மறுபடியும் வென்று காட்டுவேன் ஏவராலும் அதை தடுக்கமுடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் பல நாள் கோரிக்கையான ஆம்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார்.

இவருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மத்தியில் பாஜக ஆட்சியை ஒழிக்க தமிழகத்தில் தனித்து போட்டியிடும் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனுக்கு ஓட்டு போடவேண்டும்.

அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், அதில் இக்கூட்டத்தில் உள்ளவர்கள் தலைவர்கள் ஆகலாம்,வார்டு உறுப்பினர்கள் ஆகலாம் என்று கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர் சொல்லி நீங்கள் தான் இக்கூட்டதை உருவாக்கியவர்கள் அதனால் உங்களுக்கு அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுக்கப்படும் நகைச்சுவையுடன் கண்ணீர் மல்க ஓட்டு கேட்டார்.

Conclusion:இக்கூட்டத்தில் அக்கட்சயின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.