தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகமாக வெளியில் வருவதில்லை. மேலும் கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நடமாட முடியாமல் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வெயிலுக்கு பெயர்போன வேலூர் மாவட்டம் ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 3.45 மணி முதல் அதிக காற்று வீசியதுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் நான்கு மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை நீண்ட நேரம் நீடிக்காமல் 15 நிமிடங்களே பெய்தது. இருந்தும் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது நேரம் மழையை ரசித்தனர்.