வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, அவர் நோயாளிகள், பொதுமக்கள் ஆகியவர்களிடம் மருத்துவமனையின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனையில் வெறும் 11 மருத்துவர்களே பணியில் உள்ளதால், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மக்கள் வில்வநாதனிடம் கோரிக்கை விடுத்தனர். இவை அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என எம்எல்ஏ வில்வநாதன் உறுதியளித்துச் சென்றார்.