ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைப்பு: பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் - pagujan samaj party

வேலூர் : நாகையில்  அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து வேலூர், சேலம், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைப்பெற்று வருவதால் காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

vellore-salem-and-tanjore
author img

By

Published : Aug 26, 2019, 4:18 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வேதாரண்யம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

அதன்படி ஆற்காடு, ராணிப்பேட்டை, அரக்கோணம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அக்கட்சியினர் மறியல் போராட்டங்கள் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

இதேபோல், ஆம்பூர் பேருந்து நிலையத்திலும் விசிக கட்சியினரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் பந்தநல்லூர் - சீர்காழி சாலையில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பதி சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அம்பேத்கர் சிலை உடைப்பு : வேலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம்

கடலூர் மாவட்டம் மீரா திரையரங்கம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மயிலாடுதுறை சீர்காழி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்ட நீலப்புலிகள் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

Intro:வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் நீலப்புலிகள் இயக்கத்தினர் சாலைமறியல்:-Body:நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை சீர்காழி மெயின்ரோட்டில் நீலப்புலிகள் இயக்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சிலையை உடைத்தவர்களை கைது செய்யகோரியும் முழக்கமிட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மயிலாடுதுறை சீர்காழி சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.