திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் ஆம்பூர் இஸ்லாமிய சுன்னத் வால் ஜமாத் அமைப்புகள், அனைத்துக்கட்சிகள் சார்பில் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கையில் தேசியக்கொடி ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: