கரோனா பரவலைத் தடுக்க இதுநாள் வரை வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை வணிகக் கடைகளும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டுவந்ததன.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் புதிய தளர்வுகளை அறிவித்தார். அதன்படி, இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறிக் கடை, மளிகைக் கடை, இறைச்சிக் கடை, தேநீர்க் கடை, முடிதிருத்தும் நிலையம் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இதுவரை ஊரகப் பகுதிகளில் மட்டுமே திறக்க தேநீர்க் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் அனுமதிக்கப்படிருந்தது. புதிய தளர்வுகளின்படி, இன்று வேலூரின் முக்கிய நகரப் பகுதிகளான ஆர்டிஓ சாலை, ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, காட்பாடி ஆகிய இடங்களில் உள்ள அனைத்துக் கடைகளும் இன்று திறக்கப்பட்டன.
அதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து வகை காய்கறிக் கடைகளும் மளிகைக் கடைகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏசி பயன்படுத்தாமல் செயல்பட அனுமதியளித்ததையடுத்து அந்தக் கடைகளும் திறக்கப்பட்டன.
இதையும் படிங்க: வேலூரில் இரண்டாயிரத்தைக் கடந்த கரோனா!