திருப்பத்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் தனிமாவட்டமாக பிரித்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகைதரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் அமோகமாக வரவேற்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இருக்கும் அதிமுக கட்சி ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !