சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை 9 மணிக்கு சசிகலா தமிழ்நாடு புறப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
திடீரென காலை 7.45 மணிக்கே சசிகலா தேவனஹள்ளி விடுதியிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சென்னை புறப்பட்டார்.
முன்னதாக சசிகலா புறப்படும்பொழுது பெண்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பிவைத்தனர். தமிழ்நாடு எல்லையான ஓசூர் பகுதியில் சசிகலாவிற்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த அமமுக, அதிமுக தொண்டர்கள் சசிகலாவை மலர்த்தூவி வரவேற்றனர்.
அந்த வகையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே பல்வேறு தென் மாவடங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுக நிர்வாகிகள் இரவு வந்த சசிகலாவிற்கு மலர்த்தூவி வரவேற்றனர்.
இதையும் படிங்க: மேள தாளங்கள் முழங்க சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு!