ETV Bharat / state

பிறந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்ற இளம்பெண்.. வேலூரில் நடந்த கொடூரம்..! - today latest news in tamil

young woman left newborn baby: பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்ற இளம்பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

young woman left newborn baby
வேலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்ற இளம்பெண்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:32 PM IST

வேலூர்: பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பிறநோயாளிகள் பிரிவு பகுதியில் இருந்து நேற்று (செப் 20) இரவு இடைவிடாமல் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அங்குச் சென்ற பொதுமக்கள் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று நாற்காலியில் தனியாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அந்த குழந்தையின் அருகில் யாரும் இல்லாததால் குழந்தையைச் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மீட்டு மருத்துவமனை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதை அக்கம் மருத்துவனை முழுவதுமாக மருத்துவமனை பணியாளர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.

அப்போது பல மணி நேரம் ஆகியும் குழந்தையைத் தேடி யாரும் வராததாலும், குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாத காரணத்தாலும் அந்த குழந்தையின் பெற்றோர்கள் விட்டு விட்டுச் சென்றதை உணர்ந்த பணியாளர்கள் குழந்தைக்கு முதலுதவி அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து மருத்துவமையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், குழந்தையைப் பெற்ற தாய் மருத்துவமனைக்கு மஞ்சள் காமாலை இருப்பதனால் சிகிச்சைக்கு வந்ததாக அங்குச் சிகிச்சைக்காக வந்திருந்த பிற நோயாளியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், குழந்தை அழகாக இருந்ததால் அங்கிருந்தவர்களில் சிலர் இந்த குழந்தையும் அந்த பெண்மணியும் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுவதாகவும். இந்த நிலையில் குழந்தை உறங்கியதும் அந்தப் பெண்மணி குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி புகைப்படத்தை வைத்து, யார் அந்த பெண் என்பதையும், எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காகக் குழந்தையை விட்டுச் சென்றார்? என பல்வேறு கோணங்களில் போலீஸ்ஸர் தீவிரமாக அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாடகை கார் ஓட்டுநர் வங்கியில் டெபாசிட்டான ரூ.9ஆயிரம் கோடி.. இன்ப அதிர்ச்சியில் மிரண்டு போன ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.