வேலூர்: காட்பாடி அடுத்த வடுகந்தாங்கலில் இன்று (நவ.28) திமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், வரவேற்பு விளம்பர பேனர்கள் கட்டும் பணியில் முன்னாள் வடுகந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து உட்பட இருவர் ஈடுபட்டனர்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி(cmc) மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: விநோத நோயால் துடிக்கும் வேலூர் சிறுவன்.. அரசிடம் மன்றாடும் ஏழைத்தாய்!