வேலூர்: ஆரணியைச் சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ராஜா(32), அதே பகுதியில் உள்ள 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அம்மாணவியின் தாய் புகார் அளித்திருந்தார்.
நீதித்துறை நடுவர் முன் சரணடைந்த ராஜா:
புகாரின் பேரில் நேற்று முன்தினம் (ஜூன் 22) ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (ஜூன் 23) வழக்கில் தொடர்புடைய ராஜா வேலூர் நீதித்துறை நடுவர் முகிலாம்பிகை முன் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து ராஜாவை வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்டது. மேலும் நாளை (ஜூன் 25) திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் முன் நிறுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் தாக்கிய நபருக்கு வலைவீச்சு