தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதில், வேலூர் மாவட்டத்தில் இதுவரையில் 1,739 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 96 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் வேலூரில் கரோனாவால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’கரோனாவைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்கள்; உங்களைக் காக்க நாங்கள் இருக்கிறோம்’ - அமைச்சர் விஜய பாஸ்கர்