வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை, ஒடுகத்தூரை அடுத்த சந்தைமேடு கிராமத்தை சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ்(22) என்பவர் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்வீட் கடைக்குச் சென்று சந்தோஷை கண்டித்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது உறவினர்களுடன் சந்தைமேடு பகுதிக்குச் சென்று மாணவியின் வீடு புகுந்து அவர்களைத் தாக்கியுள்ளார்.
இதில், பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழிப்பறி செய்து செழிப்பான வாழ்க்கை.. கடலூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!