வேலூர்: குடியாத்தம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிசு ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் குடியாத்தம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் கால்வாயில் இருந்த வளர்ச்சி அடையாத சுமார் 5 மாத பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப்பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவுநீர் கால்வாயில் சிசுவை வீசிச் சென்ற அந்தப்பெண் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வளர்ச்சி அடையாத 5 மாத சிசு கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரியார் நகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!