வேலூர்: குடிமைப்பொருள் வழங்கல் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் அபாஸ் குமார் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் காவல்துறை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அவரது குழுவினர் இணைந்து இன்று (ஆகஸ்ட் 1) கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த கர்நாடகப் பதிவெண் கொண்டு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 31 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் இவை தமிழ்நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம், பங்காருபேட்டைக்கு கடத்திச்செல்லப்பட்டது எனவும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பங்காருபேட்டையைச் சேர்ந்த பாலு (35), கோபி (42), சென்னையைச் சேர்ந்த பிரபு (42) ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.